உணவு

தக்காளியில் இவ்வளவு நன்மைகளா?! – ஆரோக்கியத்தை அள்ளி தரும் தக்காளி பற்றிய சிறிய தகவல் தொகுப்பு

தக்காளி என்றால் உங்கள் நினைவுக்கு வருவது அதன் இனிப்பு மற்றும் சுவை தான். அது உடல்நலத்திற்கு நன்மையை விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியும் தானே.  அது ஏன் ஆரோக்கியமான உணவாக விளங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.

சிவந்த, பழுத்த தக்காளியை ஒரு கப் (150 கிராம்) அளவிற்கு உண்ணும் போது, போதுமான அளவு வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் கிடைக்கும்.

tomato

இயற்கையாகவே தக்காளியில் சோடியம், சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைந்த அளவில் இருக்கிறது.

உயிர்ச்சத்து பி1, நியாசின் உயிர்ச்சத்து, வைட்டமின் பி6, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரமும் தக்காளியில் உள்ளதால், அது ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணையாக நிற்கும்.

இது போக 150 கிராம் தக்காளியில், 2 கிராம் நார்ச்சத்து உள்ளது. தினமும் பரிந்துரைக்கப்படும் அளவில் 7 சதவீத நார்ச்சத்து இதில் இருந்தே கிடைத்துவிடுகிறது. தக்காளியில் நீர்ச்சத்தும் அதிகமாக உள்ளது.

அதனால் அது வயிற்றையும் நிரப்பிவிடும். மேலும் இரத்தக் கொதிப்பு, அதிக கொழுப்பு, வாதம் மற்றும் இதய நோய்களில் இருந்தும் தக்காளி காக்கும்.

சத்தான ஊட்டச்சத்தின் கலவையாக தக்காளி விளங்கினாலும், அதையும் மீறி இன்னும் இதில் பல நன்மைகள் அடங்கியுள்ளது.

ஆரோக்கியமான சருமம் :

சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க தக்காளி பெரிதும் உதவும். ஏனெனில் கேரட் மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள பீட்டா கரோடின் தக்காளியிலும் உள்ளது.

tomato for skin

அது சருமத்தை சூரிய வெப்பத்தில் இருந்து காக்கும். மேலும் தக்காளியில் உள்ள லைகோபீன், புறஊதாக் கதிர்களில் இருந்து காக்கும். அதனால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும்.

வலுவான எலும்புகள் :

வலுவான எலும்புகள் பெறுவதற்கு தக்காளி பெரிதும் உதவும். தக்காளியில் உள்ள வைட்டமின் கே மற்றும் கால்சியம் எலும்பை திடமாக வைத்து, எலும்புகளில் ஏற்படும் கோளாறுகளையும் சரிசெய்யும்.

மேலும் இதிலுள்ள லைகோபீன், எலும்பின் பொருண்மையை மேம்படுத்தும். எலும்புப்புரை நோய்களை எதிர்த்து போராடவும் இது உதவும்.

புற்றுநோய்க்கு எதிரி :

இயற்கையாகவே தக்காளி புற்றுநோய்க்கு எதிராக போராடும் குணத்தை கொண்டவ. மீண்டும் லைகோபீன் தான் இதற்கும் துணை புரிகிறது.

அதிலும் புரோஸ்டேட் புற்றுநோய், கர்ப்பவாய் புற்றுநோய், வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், வயிற்று புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய் போன்ற பல வகையான புற்றுநோய்களில் இருந்து காக்கும்.

அணுக்களை பாதிப்படையச் செய்யும் இயக்க உறுப்பு கோளாறுகளை எதிர்த்து போராடும் வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் தக்காளியில் உள்ளது.

நீரிழிவு :

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரியான அளவில் வைத்திருக்கவும் தக்காளி உதவுகிறது. ஏனெனில் தக்காளியில் குரோமியம் வளமையாக உள்ளதால், அது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்.

tomato controls diabetes
 
பார்வை கோளாறு :

தக்காளி கண் பார்வையையும் மேம்படுத்தும். தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ, கண் பார்வையை மேம்படுத்தி மாலை கண் வியாதி வராமல் தடுக்கும். மேலும் இது குணப்படுத்த முடியாத கோளாறான மாக்குலர் டி-ஜெனரேஷன் வரும் ஆபத்தையும் தடுக்கும்.

உடல் எடையை குறைக்க :

தக்காளி உடல் எடையை குறைக்க உதவும். எனவே எடையை குறைக்க டயட்டில் இருந்தால், கண்டிப்பாக தினமும் பல தாக்காளிகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

சிறந்த உணவாக விளங்கும் இது, சாலட் மற்றும் சாண்ட்விச்சாகவும் விளங்கும்.

தக்காளியில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், அவை எடையை குறைக்க உதவுவதோடு, வயிற்றையும் நிறைக்கும். மேலும் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ள உணவாகவும் இது விளங்கும்.

Related posts