வைரலாகும் வீடியோ
கல்கி எழுதிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை மையமாக வைத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கிய திரைப்படம் பொன்னியின் செல்வன்-1. இதில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் பேசிய எல்லாம் அவளை மறக்கத்தான் என்ற வசனத்தை ஒரு குழந்தை தனது மழலை குரலில் பேசியுள்ளது. இந்த வீடியோவை நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மழலை ஆதித்த கரிகாலன்!! pinnriyae’பா!!💛 pic.twitter.com/xH0l3S8EN0
— Vikram (@chiyaan) November 6, 2022

