புதிய போஸ்டர்
கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். இப்படம் ரசிகர்களிடையே பெரும் வெற்றி பெற்றது. இதனால் 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் உருவாக்கி வருகிறார். இதில் கமலுடன் சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், அனிருத் இசையமைக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், இன்று கமல் ஹாசனின் பிறந்த நாளையொட்டி இந்தியன் 2 படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
To the one who’s versatility is beyond comparison, wishing the legend of Indian cinema a very happy birthday from team #Indian2#Ulaganayagan @ikamalhaasan #HBDKamalHaasan pic.twitter.com/rlwxnJmRbd
— Red Giant Movies (@RedGiantMovies_) November 7, 2022

