சினிமாவெள்ளித்திரை

ட்ரெண்டாகும் ஜெயிலர் ரஜினியின் புகைப்படம்!

ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ரஜினியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

புதிய புகைப்படம்

டாக்டர் படத்தை அடுத்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ரஜினியின் 169-வது படத்தை இயக்கி வருகிறார். ஜெயிலர் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, கன்னட நடிகர் சிவராஜ் குமார், வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரஜினி இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

 

Related posts