தமிழகத்தில் விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளார்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை குறைத்திருக்க வேண்டும். திமுக அரசு சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் சிறந்த முறையில் ஆட்சி நடத்துகிறது.
மேலும், தமிழ்நாட்டில் காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்த தகுதியற்றது’ இவ்வாறு கூறியுள்ளார்.

