சினிமாவெள்ளித்திரை

பிரபாஸ் பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

டீசர் ரிலீஸ்

ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான பாகுபலி திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் இவர் தற்போது ‘ஆதிபுருஷ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ள இத்திரைப்படம் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இதில் நடிகர் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், கிரித்தி சனோன், சைப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ஆதிபுருஷ் படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வருகிற 2-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அயோத்தி நகரில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related posts