அரசியல்சமூகம்தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் செம்மொழி தமிழ் விருது !

பெரும்பாக்கம் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், செம்மொழித் தமிழ் விருதுகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார்.

விருது வழங்கும் விழா

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கும் விழா பெரும்பாக்கம் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் 2020, 2021, 2022-ம் ஆண்டுக்கான விருதுகள் தமிழறிஞர்களுக்கு வழங்கப்பட்டது. 2020-ம் ஆண்டுக்கான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது முனைவர் ம.இராசேந்திரனுக்கு வழங்கப்பட்டது. மேலும், 2021-ம் ஆண்டுக்கான விருது முனைவர் நெடுஞ்செழியனுக்கும், 2022-ம் ஆண்டுக்கான விருது ழான் லூய்க் செல்வியாருக்கும் வழங்கப்பட்டது.

புத்தகங்கள் வெளியீடு

அதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழறிஞர்கள் எழுதிய 16 புத்தகங்களை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு மற்றும் எம்.பி தமிழச்சி தங்க பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.

Related posts