அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் எரிபொருள் தீர்ந்து சிறிய ரக விமான போக்குவரத்து மிகுந்த சாலையில் விழுந்து நொறுங்கியது.
நொறுங்கிய விமானம்
அமெரிக்கா, ஃப்ளோரிடா மாகாணத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஓன்று கிளம்பி சிறிது தூரம் சென்றது. அப்போது, விமானத்தில் எரிபொருள் தீர்ந்து விட்ட காரணத்தால் போக்குவரத்து மிகுந்த சாலையில் விழுந்து நொறுங்கியது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது, விமானத்தில் இருந்த ரேடார் கருவி பழுதாகி இருந்ததால் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தார். விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

