சமூகம் - வாழ்க்கைசினிமா

மீண்டும் ஒன்று சேர்ந்த தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதி !

பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வந்த நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தனது மகனுக்காக இருவரும் சேர்ந்திருக்கிறார்கள்.

தனுஷ்- ஐஸ்வர்யா

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் தனுஷும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்களும் உள்ளனர். இதனிடையே தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தனித்தனி பாதைகளில் பயணிக்கப்போவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தனர். அதனைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து தனுஷ் பெயரை நீக்கினர்.

மேலும், கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், இவர்களுடைய மூத்த மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சியில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து பங்கேற்றுள்ளனர்.

 

Related posts