Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 16
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 20262 Mins Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரும் ஏப்ரல் 2-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். வணிகர்களான இவர்கள், சாத்தான்குளம் பஜார் பகுதியில் செல்போன் கடை வைத்திருந்தனர். இந்த சூழலில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி ஊரடங்கு அமலில் இருந்த கால கட்டத்தில், இவர்களின் கடை குறிப்பிட்ட நேரத்தை தாண்டி திறந்திருந்ததாக கூறப்படுகிறது.

இதனை காரணமாக கூறி, இருவரையும் விசாரணைக்காக போலீசார் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது, போலீசார் அவர்களை கடுமையாக தாக்கினர். இதில் அடுத்தடுத்து தந்தையும், மகனும் உயிரிழந்தனர்.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கை, சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். அதில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையையும், இரண்டாம் கட்டமாக கூடுதலாக 400 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையையும் மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இதையும் படிக்க :  போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

இதையும் படிங்க: பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தருமபுரியில் சௌமியா அன்புமணி, பெரம்பூரில் திலகபாமா போட்டி

இந்த வழக்கு தொடர்பான விசாரணை, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த மார்ச் 2- ஆம் தேதி மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி முத்துக்குமரன் முன்பாக விசாரணை நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதரிடம், நீதிபதி நேரடியாக கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கடந்த மார்ச் 23- ஆம் தேதி நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பை வாசித்த நீதிபதி முத்துக்குமரன், “உயிரிழந்த ஜெயராஜுக்கு இருதய மற்றும் நுரையீரல் பிரச்சனை இருந்தது. ஆனால் நோய்த்தொற்று காரணமாக அவர் உயிரிழக்கவில்லை. கம்பு, கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கியதாலயே தந்தையும், மகனும் இறந்ததாக அரசு மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறியுள்ளனர். எனவே, இது கொலை என தீர்மானிக்கப்படுகிறது. தடய அறிவியல் ஆய்வும் இதைதான் கூறுகிறது. குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்பது உறுதியாகியுள்ளது. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் மார்ச் 30-ல் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க :  தெற்கு ரயில்வே : விழுப்புரம் டூ புதுச்சேரி தினசரி விரைவு ரயில் மீண்டும் தொடக்கம் !

இதையடுத்து மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது, “சாத்தான்குளம் வழக்கில் மத்திய, மாநில அரசுகளின் அறிக்கை ஏன் தாக்கல் செய்யப்படவில்லை? சாத்தான்குளம் வழக்கு மிக முக்கிய வழக்கு. எந்த கருத்தாக இருந்தாலும் பதில் மனுவாகத் தாக்கல் செய்யுங்கள்” என்று நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்தார்.

மேலும், இவ்வழக்கில் மத்திய, மாநில அரசுகள் அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் ஏப்ரல் 2 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சாத்தான்குளம் வழக்கில் என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளிடம் நீதிபதி அறிக்கையைக் கேட்டிருந்தார் என்பது நினைவுக்கூறத்தக்கது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு
Next Article ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

Related Posts

இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
குற்றம்

இருசக்கர வாகனத்தை குறுக்கே நிறுத்தியதால் மோதல்: வீடு புகுந்து சூறையாடிய அக்கா – தம்பி உட்பட 7 பேர் கைது

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.