அரசியல்சமூகம்சமூகம் - வாழ்க்கைதமிழ்நாடு

கனியாமூர் பள்ளியில் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முகமது அலி ஆய்வு !

கனியாமூர் பள்ளியில் மாவட்ட 2வது குற்றவியல் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முகமது அலி இன்று ஆய்வு செய்தார்.

நீதிபதி முகமது அலி

கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக கடந்த மாதம் நடைபெற்ற போராட்டம் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின் போது பள்ளி வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியது மற்றும் பள்ளி பொருட்களை அடித்து நொறுக்கப்பட்டனர். இந்த வன்முறையில் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், கனியாமூர் பள்ளியில் கள்ளக்குறிச்சி மாவட்ட 2வது குற்றவியல் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முகமது அலி இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். கலவரத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ள அறிக்கை சரியாக உள்ளதாக என்பது தொடர்பாகவும் ஆய்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.

Related posts