கேரளாவில் ஆம்புலன்ஸ் கதவைத் திறக்க முடியாமல் போனதால் சாலை விபத்தில் படுகாயம் அடைந்தவரின் உரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
கேரள மாநிலம் கருவந்துருத்தியைச் சேர்ந்த கோயமோன். இவர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனையில் கொண்டு செல்ல அறிவுறுத்தினர். இதையடுத்து கோயமோனை ஆம்புலன்சில் ஏற்ற முயற்சித்த போது ஆம்புலன்சின் கதவைத் திறக்க முடியாமல் போனது. பின்னர் அரை மணி நேரம் போராடி ஆம்புலன்ஸ் கதவை உடைத்து திறந்தனர். பின்னர் கோயமோன் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இச்சம்பவம் கேரளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

