அரசியல்சமூகம்தமிழ்நாடு

புதுச்சேரி சட்டசபை காலவரையின்றி ஒத்திவைப்பு !

கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த புதுச்சேரி சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒத்திவைப்பு

புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 7 நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்று மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் ரங்கசாமி பேசினார். மேலும், முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில், புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நிறைவடைந்தது. இதையடுத்து, அவை நடவடிக்கைகள் முடிவடைந்ததால் பேரவையை காலவரையின்றி சபாநாயகர் செல்வம் ஒத்திவைத்தார். கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Related posts