ஆன்மீகம்

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

சென்னையில் பிரபலமாக உள்ள பாடிகார்டு முனீஸ்வரர் கோவில், பல்லவன் சாலையில், ராணுவ வீரர்கள் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது.

1860 ஆம் ஆண்டு ஆர்காட்டிலிருந்து சென்னைக்கு பிழைக்க வந்தவர்கள் தங்கள் குலதெய்வமாக தங்களுடன் எடுத்து வர பட்டவர் இந்த முனீஸ்வரன். ஆரம்பத்தில் தலைமை செயலக வளாகத்தில் இருந்தவர் 90 ஆண்டுகளுக்கு முன் சென்டிரல் ரயில் நிலையத்தின் எதிரில் பல்லவன் பணிமனையின் முன் பிரதிஷ்டை செய்யப்பட்டார்.

அப்போது இங்கு பல்லவன் பேருந்துகளுக்கு பாடி கட்டும் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. அதனால் இந்த பெயரிலேயே முனீஸ்வரன் அழைக்கபட்டார் பின்னாளில் இது பாடிகாட் முனீஸ்ரன் என்று மறுவியது .

இந்த பகுதியில் முன்பு ஆங்கில அதிகாரிகள் குடியிருப்பு இருந்தது. அதில் ஒரு அதிகாரி இந்த கோயில் பூக்காமல் அகற்ற உத்தரவிட்டிருக்கிறார். அடுத்த நாள் அவருக்கு விபத்து ஏற்பட்டு பலத்த காயமடைந்தார். அங்கிருந்த மக்களின் அறிவுரைபடி கோயில் அகற்றம் உத்தரவை திரும்ப பெற்றார் .

முனீஸ்வரரை வணங்கிய உடன் குணமானார். இந்த சம்பவத்திற்கு பிறகே அங்கு முனிஸ்வரர் பிரபலம் அடைந்தார். சென்னையின் பிரபலமான கோயில்களில் இக்கோயில் மிக முக்கியமான ஒன்று. முனிஸ்வரன் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே காவல் தெய்வமாவார்.

சென்னையில் எந்த பகுதியில் எந்த வாகனம் வாங்கப்பட்டு பதிவு செய்யப்பட்டாலும் இந்த கோயிலில் பூஜை செய்து விட்டு பின்பு தான்பயன்படுத்துகிறார்கள். பூஜையின் போது எலுமிச்சை சுருட்டு சிலர் வேண்டுதலுக்கு ஏற்ப மதுபானங்கள் வைத்தும் வழிபடுகிறார்கள்.

இந்த கோயிலில் வாகனங்களை பூஜை செய்தால் வாகனம் நிரந்தரமாக ஒருவரிடம் தங்கும் என்பது ஐதீகம்.அதன் மூலம் பாதுகாப்பாக பயணம் செய்ய முனீஸ்வரர் துணை நிற்பதாக மக்கள் நம்புகிறார்கள்.

 

 

Related posts