TRP என்பதன் ஆங்கில விளக்கம் Television Rating Point (டெலிவிஷன் ரேட்டிங் பாயிண்ட்). 30 நாட்களில் பார்வையாளர்களின் விவரங்களை தொடுத்து, எந்த தொலைக்காட்சி அதிகநேரம் பார்க்கப்படுகிறது என அறிய TRP உதவுகிறது.
ஒரு தொலைக்காட்சிக்கு வருமானம் முழுவதுமே விளம்பரங்களில் இருந்துதான் வரும். அதற்காகத்தான் பல சேனல்கள் போட்டிபோட்டுக்கொண்டு TRP இல் முன்னிலை பெற பல மாதிரியான நிகழ்ச்சிகளை வழங்குகின்றன.
TRP ரேட்டிங் யாரால் கணக்கிடப்படுகிறது?
இந்தியாவை பொறுத்தவரை INTAM (Indian Television Audience Measurement) என்கிற ஏஜென்சி TRP யை கணக்கிடுகிறது.இது தவிர DART (Doordarshan Audience Ratings) தனியாக கணக்கிடுகிறது.
இயல்பான முறையில் TRP கணக்கிடுவது எப்படி?
இயல்பான முறைப்படி INTAM ஏஜென்சி people meters என்னும் கருவியை வீடுகளில் பொறுத்துவார்கள். பலதரப்பட்ட மக்களின் தகவல்களை பெற இடம், வயது, திருமணம், பாலினம் என பலவாறாக பிரித்து வெவ்வேறு வீடுகளில் பொறுத்துவார்கள்.
அந்த கருவியானது நீங்கள் எந்த அலைவரிசையை பார்க்கிறீர்களோ அந்த frequency யை நேரத்தோடு சேமித்து வைத்துக்கொள்ளும். பிறகு ஒரு மாதம் கழித்து வீடுகளில் இருந்து கருவிகள் பெறப்படும்.
அந்த கருவியில் இருந்து சேகரிக்கப்பட்ட Frequency களை சேனல்களின் பெயர்களாக மாற்றப்படும் . எந்த சேனல் அதிகமாக பார்க்கப்டுகின்றது என்பது கண்டறியப்படுகிறது. அந்த தகவல்களே TRP ரேட்டிங்காக வெளியிடப்படுகிறது.
இந்த முறைப்படி 5500 வீடுகளில் மட்டுமே இதற்கான கருவிகள் பொருத்தப்படுகின்றன. கோடிக்கணக்கான நபர்களின் விருப்பத்தை 5500 பேரிடம் மட்டுமே நடத்தப்படும் ஆய்வில் சரியாக அறிந்துகொள்வது நிச்சயம் நடக்காத ஒன்று.
இதில் உடன்பாடு இல்லாமல் போனதால் தான் தூர்தர்சன் DART (Doordarshan Audience Ratings) தனியாக ரேட்டிங் செய்ய ஆரம்பித்தது. இதில் வாராவாரம் மக்களிடம் நேரடியாக மேற்கொள்ளும் கருத்து கணிப்பின் மூலமாக தனது ரேட்டிங் முடிவுகளை வெளியிடுகிறது.
ஆரம்ப காலங்களில் அதிகப்படியான மக்கள் கேபிள் (analog) மூலமாகவே தொலைக்காட்சிகளை பார்த்து வந்தனர். இப்போதும் குறிப்பிட்ட மக்கள் கேபிள் (analog) முறையிலேயே இருக்கின்றனர்.
இதனால், அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதனை அறிய people meter என்னும் கருவியை பயன்படுத்தினர். இதன் விலை மிக அதிகம். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படவேண்டி இருந்தது. அதிகமான வீடுகளில் பொறுத்த முடியாத சூழ்நிலையும் இருந்துவந்தது.
நவீன முறையில் TRP கணக்கிடுவது எப்படி?
தற்போது மக்கள் கேபிள் முறையிலிருந்து செட் ஆப் பாக்ஸ் முறைக்கு மாறிவிட்டார்கள். இதனால் தரவுகளின் நம்பிக்கையை அதிகரிக்க INTAM Picture Monitoring Technique ஐ பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது.
இதிலும்,பழைய முறையில் People Meter கருவியானது வீடுகளில் பொருத்தப்படும். அந்த கருவிகள் தொலைக்காட்சி பெட்டியின் திரையின் குறிப்பிட்ட பகுதியினை பதிந்து கொண்டே வரும்.
TRP ரேட்டிங் துல்லியமானதா?
தற்போதுள்ள முறைப்படி வழங்கப்படும் TRP ரேட்டிங் துல்லியமானதாக இருக்க வாய்ப்பே இல்லை.கோடிக்கணக்கான மக்களின் விருப்பத்தை சில ஆயிரம் பேரின் விருப்பங்களில் கண்டுபிடிப்பது துல்லியமானதாக இருக்க வாய்ப்பே இல்லை.