தொழில்நுட்ப உலகின் ஜாம்பவான்கள் வரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் Facebookக்கிற்கும் மறுக்க முடியாத இடம் உண்டு.
2004 ஆம் ஆண்டு Facebook துவங்கப்பட்டது என்றாலும் அதற்கான ஐடியா FaceMash இல் இருந்துதான் பிறந்திருக்கிறது . 2003 ஆம் ஆண்டு FaceMash எனும் புரோகிராமை மார்க் ஹார்வேர்டு பல்கலைக்கழக நண்பர்கள் வட்டாரத்தில் வெளியிட்டார். FaceMash என்பது இருவரில் யார் “Hotter” அதாவது கவர்ச்சியானவர் என்பதனை ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கும் வசதி கொண்ட புரோகிராம்.
இந்த புரோகிராமை வெளியிட்டமைக்காக கல்லூரி நிர்வாகத்தால் தண்டனை பெற்றார் மார்க் ஜுக்கர்பெர்க். இருந்தாலும் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்படுவதில் இருந்து சிறிதளவில் தப்பித்துக்கொண்டார்.
FaceMash இல் இருந்துதான் Facebook க்கிற்கான சிந்தனை மார்க்கிற்கு தோன்றி இருக்கிறது. ஆனால் அப்போது Face Book என்ற ஒன்று ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் இருந்தது. அதில் மாணவர்களது புகைப்படம் மற்றும் அவர்கள் பற்றிய சிறு தகவல்கள் இடம்பெற்று இருக்கும். ஆனால் அனைத்து ஹார்வேர்டு மாணவர்களுக்குமான Face Book என்ற ஒன்று இல்லை. அப்படி ஒன்றினை உருவாக்கலாம் என்ற சிந்தனையில் உதித்ததுதான் Facebook .
2004 ஆம் ஆண்டு thefacebook.com ஆனது ஹார்வேர்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டும் வெளியிடப்பட்டது. அடுத்த சில நாட்களுக்கு பிறகு “The Facebook” வெளியிடப்பட்டது.
ஹார்வேர்டு பல்கலைக்கழக மாணவர்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றது The Facebook. தொடர்ந்து ஸ்டான்போர்டு, கொலம்பியா போன்ற பல கல்லூரி மாணவர்களுக்கும் பறந்து விரிந்தது.
இப்படி துவங்கிய Facebook இன்று அனைவரது வாழ்விலும் அங்கம் வகிக்கின்ற ஒரு விசயமாக மாறி இருக்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடமாவது மக்கள் Facebook இல் செலவழிக்கிறார்கள். ஆரம்பகாலத்தில் இதன் மூலமாக வருமானம் வருமா என எதிர்பார்த்து இதனை மார்க் உருவாக்கினாரா என்பது என்பது தெரியவில்லை ஆனால் இன்று மிகப்பெரிய பணக்காரராக மார்க் உருவாகி இருப்பதற்கு Facebook மிக முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.