உணவுமருத்துவம்

கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் – “தேடிப் படிக்கவேண்டியது”

பொதுவாக சமையலில் தாளிப்பதற்கு பயன்படும் கறிவேப்பிலை சில பிரத்யோக மருத்துவ பயன்களையும் அளிக்கிறது.

கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், இரும்பு, பாஸ்பரஸ், விட்டமின்கள் ஆகியவை கறிவேப்பிலையில் உள்ளடங்கி இருப்பதால் அது நல்ல இருதய செயல்பாட்டிற்கும், நோய் எதிர்ப்பு சக்தியாகவும் திகழ்கிறது. தலைமுடி மற்றும் தோல் ஆகியவை பொலிவுடன் இருக்க கறிவேப்பிலை உதவுகிறது.

 

கறிவேப்பிலையில் இரும்பு சத்தும், ஃபோலிக் அமிலமும் இருப்பதால் உடலில் ரத்த சோகையை அண்ட விடாமல் தவிர்க்கிறது.

சர்க்கரை நோய் எனப்படும் டயாபடிஸ் உள்ளவர்களுக்கு கறிவேப்பிலை சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகிறது.

கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதற்கும், ஜீரண சக்தியை மேம்படுத்தவும் பயன்படுகிறது என பல ஆராய்ச்சிகளும் நிருபணம் செய்கின்றன.

இருதய நோய் உள்ளவர்களுக்கு கறிவேப்பிலையை உணவில் சேர்த்து கொள்ள மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர்.

தலைமுடி நிறம் மாறி வெள்ளையாக போவதையும், பொலிவு குறைவதையும் கறிவேப்பிலை தடுக்கிறது. மொத்தத்தில், காய்கறிகளுடன் இலவசமாக ஒரு சிறு கொத்தாக நம் வீட்டிற்கு கறிவேப்பிலை வந்தாலும் அதன் மருத்துவ குணங்கள் ஏராளமாகும்.

Related posts