Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உணவு»60 நாட்கள் ‘ஜங்க் ஃபுட்’ சாப்பிடாமல் இருந்தால் இத்தனை நன்மைகளா? ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்களேன்!

60 நாட்கள் ‘ஜங்க் ஃபுட்’ சாப்பிடாமல் இருந்தால் இத்தனை நன்மைகளா? ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்களேன்!

March 24, 20263 Mins Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நமது உணவு பழக்கம் என்பது இப்போது ருசிக்காக மட்டுமே மாறிவிட்டது. அலுவலகத்தில் வேலை பளுவாக இருக்கும்போதோ அல்லது மாலை நேரத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதோ, நம் கை தானாகவே ஒரு பாக்கெட் சிப்ஸ் அல்லது பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை தேடுகிறது.

இத்தகைய ‘ஜங்க் ஃபுட்’ எனப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆரம்பத்தில் நாவிற்கு ருசியாக இருந்தாலும், அவை மெல்ல மெல்ல நம் உடலின் உள் உறுப்புகளை சிதைக்கின்றன. காலையில் எழுந்தவுடனேயே சோர்வாக உணர்வது, அடிக்கடி பசி எடுப்பது, காரணமில்லாத கோபம் போன்றவற்றுக்கு நாம் உண்ணும் இந்த உணவுகளே முக்கிய காரணமாகின்றன.

ஒருவேளை, வெறும் 60 நாட்கள் மட்டும் இத்தகைய உணவுகளை முழுமையாக தவிர்த்தால் நம் உடலில் என்ன நடக்கும்? இது உங்கள் உடலின் செல்கள் முதல் மூளையின் செயல்பாடு வரை அனைத்தையும் சீரமைக்கும் ஒரு அற்புதமான ‘ரீசெட்’ ஆக அமையும் என்கிறது ஆய்வுகள்.

ஜங்க் ஃபுட் எனும் சொல்லும் போது, வெறும் பாக்கெட் உணவுகள் மட்டுமல்ல, ப்ரைடு ரைஸ், நூடுல்ஸ், பரோட்டா, வடை, சமோசா என கடைகளில் கிடைக்கும் அனைத்து வறுத்த மற்றும் பொரித்த உணவுகளும் அடங்கும். இப்படியிருக்க 60 நாட்களுக்கு எந்த துரித உணவுகளையும் சாப்பிடாமல் இருந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

பசி உணர்வு மற்றும் ஹார்மோன் சீரமைப்பு:

இதையும் படிக்க :  வயதானாலும் சிலருக்கும் மட்டும் முடி நரைக்காமல் இருப்பது ஏன்? ரகசியம் இதுதான்!

தேசிய சுகாதார நிறுவனங்களின் (NIH) ஆய்வின்படி, அதிகப்படியாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடலில் பசி உணர்வை தூண்டும் ஹார்மோன்களை சீர்குலைக்கின்றன. இதனால் நாம் வயிறு நிறைந்த பிறகும் தொடர்ந்து சாப்பிடுகிறோம்.

ஆனால், 60 நாட்கள் ஜங்க் ஃபுட் தவிர்க்கும்போது, ‘லெப்டின்’ மற்றும் ‘க்ரெலின்’ போன்ற ஹார்மோன்கள் சமநிலை அடைகின்றன. இதன் விளைவாக, உங்கள் உடல் எப்போது பசிக்கிறது, எப்போது வயிறு நிறைந்தது என்ற சரியான சமிக்ஞைகளை மூளைக்கு அனுப்பத் தொடங்கும்.

இயல்பாகவே குறையும் கலோரிகள்:

2024-ல் வெளியான ‘ஒபிசிட்டி சயின்ஸ் அண்ட் பிராக்டிஸ்’ (Obesity Science and Practice) ஆய்வின்படி, மக்கள் தங்கள் பதப்படுத்தப்பட்ட உணவு உட்கொள்ளலை பாதியாகக் குறைத்தபோது, அவர்கள் எந்தக் கடுமையான டயட்டும் இல்லாமலேயே ஒரு நாளைக்குச் சராசரியாக 612 கலோரிகளைக் குறைவாக எடுத்துக்கொண்டனர். இது 60 நாட்களில் உடல் எடையைக் குறைக்கவும், இரத்த சர்க்கரை அளவைச் சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.

குடல் ஆரோக்கியம் மேம்படுதல்:

ஜங்க் உணவுகள் நம் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழித்து வீக்கத்தை உண்டாக்குகின்றன. 60 நாட்கள் இந்த உணவுகளை நிறுத்துவதன் மூலம், குடல் சுவர்கள் தன்னைத்தானே சரிசெய்து கொள்கின்றன. நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் செரிமானம் சீராகிறது. ஆரோக்கியமான குடல் என்பது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மனநிலையை தீர்மானிக்கும் முக்கிய காரணியாகும்.

இதையும் படிக்க :  ரூ.70,000 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு: ஏஐ உதவியால் மோசடி பிரியாணி ஓட்டல்கள் சிக்கின

வேகமாகும் வளர்சிதை மாற்றம்:

2026-ஆம் ஆண்டு ‘கிளினிக்கல் நியூட்ரிஷன்’ (Clinical Nutrition) இதழில் வெளியான ஆய்வின்படி, தினசரி உணவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் அளவை 15 சதவீதத்திற்குக் கீழ் குறைப்பது, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இதனால் நாள் முழுவதும் சோர்வில்லாமல் சுறுசுறுப்பாக இருக்க முடிவதுடன், இன்சுலின் உணர்திறனும் (Insulin Sensitivity) அதிகரிக்கிறது.

மூளையின் செயல்பாடும் தெளிவும்:

ஜங்க் உணவுகள் வெறும் ஐந்தே நாட்களில் மூளையின் செயல்பாட்டை பாதிக்க தொடங்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. 2025-ல் வெளியான ‘நேச்சர் மெட்டபாலிசம்’ (Nature Metabolism) ஆய்வில், டாக்டர் மேகன் கார்சியா-வெப் குறிப்பிடுகையில், இத்தகைய உணவுகள் மூளை இன்சுலினைச் செயலாக்கும் முறையை எதிர்மறையாகப் பாதிப்பதாகக் கூறுகிறார்.

60 நாட்கள் ஜங்க் ஃபுட் இல்லாமல் இருக்கும்போது, மூளை மீண்டும் புத்துயிர் பெற்று, கவனச் சிதறலைக் குறைத்து, குறிப்பிட்ட உணவுகளின் மீதான தேவையற்ற ஆசையை கட்டுப்படுத்துகிறது.

உடல் வீக்கம் மற்றும் சரும மாற்றம்:

ஹார்வர்ட் ஹெல்த் மற்றும் பல ஆய்வுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் இதய நோய்கள் மற்றும் உடல் வீக்கத்திற்கு முக்கிய காரணமாக இருப்பதாகக் கூறுகின்றன. இரண்டு மாதங்கள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளும்போது, உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி வீக்கம் குறைகிறது. இது உங்கள் தோற்றத்தில் தெளிவான சருமமாகவும், மூட்டு வலி குறைவதாகவும், உடல் உப்பசம் குறைவதாகவும் வெளிப்படும்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமுதுகு வலிக்கு காரணமாகும் வைட்டமின் டி குறைபாடு – தடுப்பது எப்படி?
Next Article “புரத உட்கொள்ளலை குறைப்பது கல்லீரல் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கலாம்” – யாருக்கெல்லாம் பொருந்தும்?

Related Posts

உணவு

கொத்துக் கொத்தாக அறுவடை செய்யப்பட்ட ‘கருப்பு கேரட்’ ; குன்னூரில் சோதனை வெற்றி

March 31, 2026
மருத்துவம்

“புரத உட்கொள்ளலை குறைப்பது கல்லீரல் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கலாம்” – யாருக்கெல்லாம் பொருந்தும்?

March 24, 2026
மருத்துவம்

முதுகு வலிக்கு காரணமாகும் வைட்டமின் டி குறைபாடு – தடுப்பது எப்படி?

March 24, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.