சினிமாமருத்துவம்

கெளதம் மேனனின் இணை இயக்குனர் திடீர் மரணம் !

திடீர் மரணம்

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில், கடந்த 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பென்சில்’. ஸ்ரீதிவ்யா, ஊர்வசி, விடிவி கணேஷ், டிபி கஜேந்திரன் ஆகியோர் நடித்திருந்த இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் மணி நாகராஜ். இவர் இயக்குனர் கெளதம் மேனனிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர். இவரின் இரண்டாவது படமான ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

இந்நிலையில், இயக்குனர் மணி நாகராஜ் இன்று திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். இவரின் மறைவு தமிழ் சினிமாவை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Related posts