Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»மருத்துவம்»முதுகு வலிக்கு காரணமாகும் வைட்டமின் டி குறைபாடு – தடுப்பது எப்படி?

முதுகு வலிக்கு காரணமாகும் வைட்டமின் டி குறைபாடு – தடுப்பது எப்படி?

March 24, 20263 Mins Read12 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நம்மில் பலருக்கு காலையில் எழுந்திருக்கும்போதே உடல் ஒருவித சோர்வுடன் காணப்படலாம் அல்லது லேசான முதுகு வலி இருக்கலாம். “நேற்று சரியாக தூங்கவில்லை” என்றோ அல்லது “வேலை பளு அதிகம்” என்றோ இதை நாம் சாதாரணமாக கடந்து விடுவோம். ஆனால், நீண்ட நாட்களாக உங்களை வாட்டும் இந்த முதுகு வலிக்கு உங்கள் உடலில் இருக்கும் ஒரு சத்து குறைபாடு காரணமாக இருக்கலாம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

ஆம், அதுதான் வைட்டமின் டி. இன்றைய சூழலில் நம்மில் பலருடைய வாழ்க்கை முறை நான்கு சுவர்களுக்குள்ளேயே முடங்கிவிட்டது. அலுவலகம், வீடு என நிழலிலேயே இருப்பதால் சூரிய ஒளி நம் உடலில் படுவது குறைந்துவிட்டது. இதன் விளைவாக, இந்தியாவில் சுமார் 80 சதவீத மக்கள் வைட்டமின் டி குறைபாட்டோடு இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

எலும்பு மற்றும் தசை ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான இந்த வைட்டமின் குறைந்தால், அது எப்படி நாள்பட்ட முதுகு வலியை உருவாக்குகிறது என்பது குறித்தும், அதை எப்படி சரி செய்வது என்பது குறித்தும் NIH ஆய்வுகள் பல முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளன.

முதுகு வலிக்கும் வைட்டமின் டி-க்கும் உள்ள தொடர்பு:

வைட்டமின் டி என்பது வெறும் ஒரு ஊட்டச்சத்து மட்டுமல்ல, அது நம் உடலில் உள்ள மற்ற தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உறிஞ்சப்படுவதற்கு ஒரு பாலமாக செயல்படுகிறது. குறிப்பாக எலும்புகளின் வலிமைக்கு தேவையான கால்சியம் சத்து உடலில் சேர வேண்டுமென்றால் வைட்டமின் டி அவசியம்.

ஒரு குறிப்பிட்ட மருத்துவ மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 12 வாரங்களுக்கும் மேலாக நாள்பட்ட முதுகு வலியால் அவதிப்படும் நோயாளிகளை பரிசோதித்தபோது ஒரு உண்மை தெரியவந்துள்ளது. அந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் யாருக்கெல்லாம் வைட்டமின் டி அளவு மிக குறைவாக இருந்ததோ, அவர்களுக்கெல்லாம் முதுகு வலி மிக கடுமையாக இருந்தது கண்டறியப்பட்டது. அவர்களின் அன்றாட வேலைகளை கூட செய்ய முடியாத அளவிற்கு அந்த வலி பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதையும் படிக்க :  விஜயகாந்த் கால் விரல் அகற்றம்; அதிர்ச்சியில் தொண்டர்கள் !

வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள்:

உங்களுக்கு வைட்டமின் டி குறைவாக இருக்கிறது என்பதை ரத்த பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம். இருப்பினும் உடல் சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். எவ்வளவு நேரம் தூங்கி எழுந்தாலும் உடல் எப்போதும் சோர்வாகவே இருப்பது இதன் முதல் அறிகுறி.

அதிகாலையில் எழுந்திருக்கும்போது தசைகளில் பிடிப்பு ஏற்படுவது, காரணமே இல்லாமல் மூட்டுகளில் வலி உண்டாவது போன்றவை வைட்டமின் டி குறைபாட்டை குறிக்கலாம். ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் எலும்பில் ஊசி குத்துவது போன்ற வலி தெரிந்தால் அது எலும்பு பலவீனமடைந்து வருவதன் அறிகுறியாகும். இத்தகைய அறிகுறிகள் முதுகு வலியுடன் சேரும்போது, அது உங்கள் உடலின் ஊட்டச்சத்து சேமிப்பு தீர்ந்து வருவதை காட்டுகிறது.

யாருக்கெல்லாம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்:

இந்தியாவில் 70 முதல் 80 சதவீத மக்கள் இந்த குறைபாட்டைக் கொண்டுள்ளனர் என்கிறது Cureus Journal of Medical Science ஆய்வில் வெளியான தகவல். இதற்கு பல காரணங்கள் உள்ளன. வயது கூடக்கூட நம் உடல் இயற்கையாகவே வைட்டமின் டி சத்தை உறிஞ்சும் திறனை இழக்கிறது. அதேபோல், அதிக நேரம் சூரிய ஒளி படாமல் அலுவலகம் அல்லது பள்ளிகளுக்குள் இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம்.

நமது சருமத்தில் இருக்கும் மெலனின் அளவு கூட சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி பெறுவதை தள்ளிப்போடலாம். குறிப்பாக கருமையான சருமம் கொண்டவர்களுக்கு இது சற்று சவாலான விஷயம். இதோடு சேர்த்து உணவில் போதிய அளவு சத்தான பொருட்களை எடுத்துக்கொள்ளாததும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க :  கோடை வெயிலை சமாளிக்க இந்த பழங்களை சாப்பிட்டால் போதும் - ஆய்வு சொல்வது இதுதான்!

இயற்கை முறையில் அளவை அதிகரிப்பது எப்படி:

வைட்டமின் டி அளவை அதிகரிக்க மிக எளிமையான வழி தினமும் சிறிது நேரம் சூரிய ஒளியில் இருப்பதுதான். வாழ்க்கை முறையில் சிறு மாற்றங்களை செய்து காலை அல்லது மாலை வேளையில் வெயில் உடலில் படுமாறு பார்த்துக்கொள்ளலாம். உணவு முறையில் மாற்றங்களை கொண்டு வருவதும் அவசியம்.

முட்டை, பால் பொருட்கள் மற்றும் கொழுப்புச்சத்து நிறைந்த மீன் வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஒருவேளை சத்து மிக குறைவாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ரத்த பரிசோதனை செய்யாமல் நீங்களாகவே மாத்திரைகளை உட்கொள்வது பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால் இதில் கவனம் தேவை.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்:

உங்களுக்கு முதுகு வலி தொடர்ச்சியாக இருந்தாலோ அல்லது தசை பலவீனம் அதிகமாக தெரிந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. முறையான ரத்த பரிசோதனை மூலம் உங்கள் உடலில் எந்த அளவு வைட்டமின் டி இருக்கிறது என்பதை கண்டறிந்து, அதற்கு ஏற்ற சிகிச்சையை பெறலாம்.

முதுகு வலிக்கு பல காரணங்கள் இருந்தாலும், அதில் அதிகம் கவனிக்கப்படாத விஷயம் இந்த வைட்டமின் குறைபாடுதான். முறையான பரிசோதனை மற்றும் சரியான உணவு பழக்கம் மூலம் இந்த சிக்கலை எளிதாக சரி செய்ய முடியும் என்று இந்த ஆய்வு ஆய்வு உறுதியாக சொல்கிறது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகர்ப்பகால உயர் ரத்த அழுத்தம்: நீண்ட நேரம் அமர்ந்திருப்பதே காரணம் – ஆய்வில் தகவல்!
Next Article 60 நாட்கள் ‘ஜங்க் ஃபுட்’ சாப்பிடாமல் இருந்தால் இத்தனை நன்மைகளா? ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்களேன்!

Related Posts

மருத்துவம்

“புரத உட்கொள்ளலை குறைப்பது கல்லீரல் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கலாம்” – யாருக்கெல்லாம் பொருந்தும்?

March 24, 2026
உணவு

60 நாட்கள் ‘ஜங்க் ஃபுட்’ சாப்பிடாமல் இருந்தால் இத்தனை நன்மைகளா? ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்களேன்!

March 24, 2026
மருத்துவம்

கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம்: நீண்ட நேரம் அமர்ந்திருப்பதே காரணம் – ஆய்வில் தகவல்!

March 24, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.