இந்தியாவில் ஒரே நாளில் 20,038 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த மாதத்திலிருந்து கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவை பொறுத்தவரை 20,038 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. நேற்று 19,139 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 20,038 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,36,89,989 இருந்தது தற்போது 4,37,10,027 ஆக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில் 16,994 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,30,45,350 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 47 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 5,25,604 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,39,073 ஆக உள்ளது. இந்தியாவில் இதுவரை 199.47 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 18,92,969 கொரோனா தடுப்பூசி சேலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

