திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் நேற்று இரவு சந்தித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரைபிரபலங்கள் அஞ்சலி
திமுக, பாஜக தொடர்ந்து அரசியல் ரீதியாக மாறி மாறி கடும் விமர்சனம் செய்து வருகிறது. இந்நிலையில், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் தாயார் புஷ்பா நேற்று தவறினார் . ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஐசரி கணேஷ் வீட்டில் இவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. இதில் ஏராளமான திரைபிரபலங்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
சந்திப்பு
இதில் திமுக சார்பில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதேபோல் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையும் அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து உதயநிதியும், அண்ணாமலையும் சந்தித்து பேசினார்கள். அண்ணாமலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

