ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கைதி ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ரவிச்சந்திரனுக்கு பரோல் நீட்டிப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ஆர்.பி. ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை பெற்று சிறையில் இருந்து வந்தன. இந்த வழக்கில் இருந்து பேரறிவாளன் அண்மையில் விடுதலை செய்யப்பட்டார். மற்ற 6 நபர்களும் இதே தீர்ப்பின் அடிப்படையை வைத்து விடுதலை செய்யலாம் என சட்ட வல்லுநர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த நவம்பர் 17ம் தேதி பரோலில் வெளியே வந்த நிலையில் ரவிச்சந்திரனுக்கு 10-வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரது தாயார் ராஜேஸ்வரி உடல்நலம் பாதிப்பை காரணமாக, அவர் உடனிருந்து கவனித்துக் கொள்ளும் வகையில், ரவிச்சந்திரனுக்கு மேலும் 30 நாட்கள் கூடுதலாக பரோலை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

