இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இடைக்கால அதிபராக பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.
அதிபர் ரணில் விக்கிரமசிங்கே
இலங்கையில், கடந்த 9ம் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்து சூறையாடினர். போராட்டக்காரர்கள் வருவதற்கு முன்பு அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறி மாலத்தீவிற்கு தப்பி சென்றுள்ள அவர் இலங்கையில் உள்ள சபாநாயருக்கு ஆன்லைன் மூலம் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இடைக்கால அதிபராக பதவியேற்றுள்ளார். புதிய அதிபர் தேர்வு செய்யப்படும் வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே செயல் அதிபராக செயல்படுவார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னாள் தற்காலிக அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனுக்கள் வரும் 19ம் தேதி பெறப்படும் என்றும், அதற்கான வாக்கெடுப்பு 20ம் தேதி நடத்தப்படும் என இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

