தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்று அமைச்சர் மா சுப்ரமணியன் கூறியுள்ளார்.
இலவச பூஸ்டர் டோஸ்
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இலவச பூஸ்டர் டோஸ் வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் இன்று தொடங்கப்பட்டது. இதற்கான முகாம் மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தலைமையில் எழும்பூர் குடும்ப நலத்துறை பயிற்சி மையத்தில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்ரமணியன், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் சுமார் 30 லட்சம் மருந்துகள் காலாவதியாகும் நிலையில் உள்ளது.
இதன்காரணமாக இலவச பூஸ்டர் டோஸ் தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு, மத்திய அரசுக்கு வலியுறுத்தியது. இதன்பெயரில் அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் இலவசமாக பூஸ்டர் டோஸ் போடும் பணிகள் தொடங்கியுள்ளது’ என்று அமைச்சர் மா சுப்ரமணியன் கூறியுள்ளார்.

