இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானி, பிரான்சின் பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் ஆகியுள்ளார்.
கௌதம் அதானி
இந்தியாவில், துறைமுகம், விமான நிலையம், எரிசக்தி, தொலைதொடர்பு, கட்டுமான துறை என பல துறைகளில் கால்பதித்து சாதித்து வருகிறார் கௌதம் அதானி. இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானி இருந்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்திய மட்டுமல்லாது தொடர்ந்து ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் முதலிடத்தை பிடித்தார். தற்போது 137.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி, பிரான்சின் பெர்னார்ட் அர்னால்ட்டை முந்தி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியலில் ஒரு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் முதல் மூன்று இடங்களுக்குள் நுழைவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. புதிய தரவரிசை பட்டியலில் அமெரிக்காவின் எலோன் மஸ்க் மற்றும் ஜெப் பெசோஸ் ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

