சினிமாவெள்ளித்திரை

ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்த இயக்குனர் பாரதிராஜா !

என்னை நேரில் காண வரவேண்டாம் இயக்குனர் பாரதிராஜா, தனது ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா

16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. தொடர்ந்து கிழக்கே போகும் ரயில்,  சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை ஆகிய படங்களை இயக்கி பிரபலமானார். இதனிடையே கடந்த 23-ம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் பாரதிராஜா சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்பட்டார். அதனையடுத்து மேல் சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வேண்டுகோள்

இந்நிலையில், இது தொடர்பாக இயக்குனர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘என் இனிய தமிழ் மக்களே. நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன். மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வரவேண்டாம்’ என குறிப்பிட்டுள்ளார்.

Related posts