சினிமாவெள்ளித்திரை

இது எனக்கு மிகவும் நெருக்கமான கதை – நடிகர் ஜெய்!

சுந்தர் சி இயக்கியுள்ள ‘காபி வித் காதல்’ திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் ஜெய் கூறியுள்ளார்.

புதிய படம் 

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காபி வித் காதல்’. ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

நடிகர் ஜெய்

இந்நிலையில், காபி வித் காதல் படம் குறித்து நடிகர் ஜெய் கூறுகையில், இந்த படத்தின் கதையை சொல்லி முடித்ததும் நான் கேட்ட முதல் கேள்வி இதை எப்படி யோசித்தீர்கள் என்பது தான். இது மிகவும் சிக்கலான கதை. அதை அழகாக சொல்லி இருக்கிறார். இந்த கதை எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது’ என்று கூறியுள்ளார்.

 

Related posts