சினிமாவெள்ளித்திரை

கவனம் ஈர்க்கும் விக்ரம்-வேதா இந்தி பட பாடல்!

புதிய பாடல் 

புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில், கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம்-வேதா. இப்படத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் ஆகியோர் நடித்திருந்தனர். சஷிகாந்த் தயாரித்திருந்த இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் விக்ரம்-வேதா படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் மாதவன் வேடத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி வேடத்தில் ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 30-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், விக்ரம்-வேதா படத்தில் இடம்பெற்றுள்ள பண்டி (Bande) என்ற வீடியோ பாடல் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

Related posts