சமூகம்சினிமா

வைரமுத்துவை தனியாக சந்திக்க வேண்டாம் – சின்மயி!

பரபரப்பு பதிவு

பிரபல தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளினியும், நடிகையுமான அர்ச்சனா அண்மையில் கவிஞர் வைரமுத்துவை நேரில் சந்தித்துள்ளார். அப்போது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்நிலையில், இதற்கு பிரபல பின்னணி பாடகி சின்மயி கமென்ட் செய்துள்ளார். அதில், அவருடன் இடைவேளையுடன் இருங்கள். மேலும், வைரமுத்துவை தனியாக சந்திக்க வேண்டாம் என பதிவிட்டுள்ளார். பாடகி சின்மயின் இந்த பதிவு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்து குறிப்பிடத்தக்கது.

Related posts