சினிமாவெள்ளித்திரை

ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சூர்யா படக்குழு!

சூர்யா 42 படக்குழு எச்சரிக்கை விடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.

வேண்டுகோள்

‘அண்ணாத்த’ படத்தை அடுத்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வரும் திரைப்படம் ‘சூர்யா 42′ நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்க, ஹிந்தி நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே படப்பிடிப்பு தளத்தில் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

இது தொடர்பாக சூர்யா 42 படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தயவு செய்து சூர்யா 42 சம்பந்தமான வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர வேண்டாம். இதனை மீறினால் உரிமை மீறல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று குறிப்பித்துள்ளது.

Related posts