கார்த்தி படம்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடித்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அதனைத்தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ‘சர்தார்’ திரைப்படமும் ரூ.100 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்நிலையில், ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களின் மூலம் பிரபலமான ராஜுமுருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ என்ற படத்தில் கார்த்தி நடிக்கிறார். அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்நிலையில், ‘ஜப்பான்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Japan pooja pictures 🙂 pic.twitter.com/5myrVQUJjU
— DreamWarriorPictures (@DreamWarriorpic) November 8, 2022

