சினிமாவெள்ளித்திரை

உதயநிதி ஸ்டாலின் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரிலீஸ் தேதி

2010-ம் ஆண்டு வெளியான ‘முன்தினம் பார்த்தேனே’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் மகிழ் திருமேனி. இதனையடுத்து அவர் இயக்கிய ‘தடையறத் தாக்க’, தடம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தது. மகிழ் திருமேனி அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் ‘கலகத் தலைவன்’. இதில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க, நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கலையரசன், பிக்பாஸ் ஆரவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ‘கலகத் தலைவன்’ திரைப்படம் வருகிற நவம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Related posts