யூட்டியூப்பில் சாதனை
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அண்மையில் வெளியான இப்படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ யூட்டியூப்பில் 26 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
ட்விட்டர் பதிவு
இந்நிலையில், வாரிசு படத்தின் இசையமைப்பளார் எஸ். தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘ரஞ்சிதமே முழு வீடியோ இப்பதான் பார்த்தேன். தியேட்டர் சீட்ல யாருமே உட்காரமாட்டீங்க’ என்று குறிப்பிட்டுள்ளார்.
