சமூகம்சினிமா

உப்பெனா பட விவகாரம் : விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து!

வழக்கு ரத்து

நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கில் அறிமுகமான திரைப்படம் ‘உப்பெனா’. இதில் வைஷ்னவ் தேவ், கிர்த்தி ஷெட்டி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இத்திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் விஜய் சேதுபதி பெற்றுள்ளதாக கூறப்பட்டது. இதனிடையே தேனியை சேர்ந்த உதவி இயக்குனர் ஒருவர் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கு விஜய் சேதுபதி தரப்பில் உப்பெனா படத்தின் ரீமேக் உரிமையை வாங்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விஜய் சேதுபதிக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்துள்ளது.

Related posts