அரசியல்இந்தியாகல்வி

புதுமைப்பெண் திட்டம் – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு !

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து உள்ளார்.

புதுமைப்பெண் திட்டம்

புதுமைப்பெண் திட்ட தொடக்கவிழாவில் பங்கேற்க டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து உள்ளார். திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் கல்லூரி மாணவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என கூறியிருந்தனர். இந்நிலையில், கல்லூரி மாணவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் விழா செப்டம்பர் 5ம் தேதி தொடங்கப்பட உள்ளது. சென்னை உள்ள பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். மேலும், விழாவில் சிறந்து விருந்தினராக பங்கேற்கவுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் 15 மாதிரி பள்ளிகள், 28 சீர்மிகு பள்ளிகளை  தொடங்கி வைக்கவுள்ளார்.

Related posts