கோவையில் ரோந்து பணியின் பொது போலீசாரிடம் கஞ்சா விற்க முயன்ற இளைஞர்கள் மூன்று நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா விற்பனை
கோவை மாவட்டம், சூலூர் அடுத்த சோமனூர் பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட தனிப்படை போலீசார் ஈடுபட்டனர். அப்போது, கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் மூவர், கஞ்சா வேண்டுமா எனக் கேட்டதாக கூறப்படுகிறது. அவர்களை அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுமர்நாத் என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த இருவருடன் இணைந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து நான்கு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

