பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக கூறி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவிகள் போராட்டம்
கோவை மாவட்டத்தில் உள்ள பாரதியார் பல்கலைகழகத்தில் ஏராளமான மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இன்று காலை 100க்கும் மேற்பட்ட மாணவிகள் பல்கலைகழக வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போராட்டத்தில் மாணவிகள் தரமற்ற உணவு, குடீநீர் வழங்கப்படுகிறது. மேலும், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பேரூர் துணை கண்காணிப்பாளர் ராஜ பாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மாணவிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், பல்கலைக்கழக அதிகாரிகளும் மாணவிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட பின்னர் போராட்டம் கைவிடப்பட்டனர்.

