குலாம் நபி ஆசாத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காஷ்மீர் காங்கிரசை சேர்ந்த 64 தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
ராஜினாமா
ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம்நபி ஆசாத் கடந்த 26ம் தேதி அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், புதிய கட்சியை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஜம்மு – காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்கள் இன்று அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். குலாம் நபி ஆசாத்திற்கு ஆதரவாக காஷ்மீர் காங்கிரசை சேர்ந்த 64 தலைவர்கள் கட்சியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்து கடிதத்தை காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஜம்மு – காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் 64 பேர் ராஜினாமா செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.