மூன்றாவது பாடல்
பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. இதில் தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்க, நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ஷாம், யோகி பாபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில், வாரிசு படத்தின் மூன்றாவது பாடலான “சோல் ஆஃப் வாரிசு” நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
#SoulOfVarisu – #VarisuThirdSingle is releasing Tomorrow at 5 PM 😍
🎙️ @KSChithra mam
🎵 @MusicThaman
🖋️ @Lyricist_Vivek#Thalapathy @actorvijay sir @SVC_official @directorvamshi @iamRashmika @7screenstudio @TSeries #BhushanKumar #KrishanKumar #ShivChanana#Varisu #VarisuPongal pic.twitter.com/VPDXO5uD4P— Sri Venkateswara Creations (@SVC_official) December 19, 2022

