மத்திய கல்விதுறை சார்பில் வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது.
சென்னை ஐஐடி
இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தங்களுடைய தரத்தை உயர்த்தும்பொருட்டு கடந்த 2016 முதல் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய கல்விஅமைச்சகத்தால் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கான உருவாக்கப்பட்ட தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு மாணவா்கள் தோச்சி விகிதம், கற்பித்தல், கற்றல், ஆராய்ச்சி, தொழில்முறை பயிற்சி உள்ளிட்ட 11 அம்சங்களை கொண்டு அடிப்படையிலான தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது.
இந்நிலையில், தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐஐடி கல்லூரி முதல் இடம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மாநில கல்லூரி 3வது இடத்தையும், லயோலா கல்லூரி 4வது இடத்தையும், கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி 6வது இடத்தையும் பிடித்துள்ளது.

