உலக புவி நாளில் மக்களுக்கு விழிப்புணர்வை எற்படுத்தும் வகையில், பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள், விழிப்புணர்வு சித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 -ஆம் நாள் உலக புவி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கூகுள் நிறுவனம் முக்கியமான தினத்தை, மக்களுக்கு நினைவு கூற மற்றும் கௌரவிற்கும் பொருட்டு விழிப்புணர்வு சித்திரத்தை வெளியிடுவது வழக்கம்.அந்த வகையில், இன்று புவி நாளை முன்னிட்டு காலநிலை மாற்றத்தினை எடுத்துக் கூறும் வகையில் அந்நிறுவனம் சித்திரம் ஒன்றை பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ மலைப்பகுதி, ஆஸ்திரேலியாவின் பெரிய பவளப்பாறைகள், ஜெர்மனியின் ஹார்ஸ் காடுகள் போன்றவை இடம்பெற்றுள்ளன. காலநிலை மாற்றத்தின் விளைவால் இவ்விடங்கள் கடந்த 30 ஆண்டுகளில் எவ்வாறு மாறுபாடு அடைந்துள்ளன என்பதை இந்த சித்திரம் விளக்குகிறது. காலநிலை மாற்றத்தினை நாம் ஒன்றாக இணைந்து சரிபடுத்த வேண்டும் என்று கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த புவி நாளன்று புவியின் வெப்பநிலையை கவனத்தில் கொள்ள வேண்டும். புவியின் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டு வருவதால், பனிப் பிரதேசத்தில் உள்ள பனிப்பாறைகள் உருகி, கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. 1.5 செல்சியஸிற்கும் குறைவாக இருக்க வேண்டிய வெப்பநிலை, அதற்கு மாறாக 3 செல்சியஸ் என்ற அளவை எட்டியுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் வறட்சி, பட்டினி, வெள்ளம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதன்காரணமாக மோசமான உணவு பற்றாக்குறை ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் சாக நேரிடும்.
இந்தியாவில் எப்பொழுதும் வெயிலானது, மே மாதம் தான் வாட்டி வதைக்கும். ஆனால், தற்போது வருடத்தின் அனைத்து மாதங்களிலும் வெளுத்து வாங்குகிறது. இந்நிலை தொடர்ந்தால் பூமியில் மனிதர்கள் வாழ்வது சந்தேகம்தான்!