அறிவியல்

QR Code பற்றித் தெரிந்துகொள்வோம் வாருங்கள்

பெட்ரோல் பங்குகளில் பணம் செலுத்தும் இடத்திலோ, கடைகளில் இருக்கும் பொருள்களிலோ கட்ட வடிவத்திலான QR Code ஐ பார்த்திருப்பீர்கள். QR Code என்றால் என்ன? எப்படி வேலை செய்கிறது? என்பதை அறிந்துகொள்வோம் வாருங்கள்.

 

Bar Code பற்றிய நம்மில் பெரும்பாலானோர் தெரிந்து வைத்திருப்போம். இத்தொழில்நுட்பத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சியே QR Code ஆகும்.QR CODE என்பதன் ஆங்கில விரிவாக்கம் QUICK RESPONSE CODE .

1டி வடிவ Bar Code ல் குறைந்த அளவிலான தரவுகளை மட்டுமே சேமிக்க முடியும். ஆனால், 2டி வடிவத்திலான QR Code இல் அதிக விவரங்களை சேமிக்கலாம்.

 

QR Code ஐ decode செய்வதற்கு ஸ்மார்ட் போன் இருந்தாலே போதுமானது. தற்போது பல்வேறு அப்ளிகேஷன்களில் QR Code இன் பயன்பாடு இருந்து வருகிறது.

QR Code -ல் இணையதளச்சுட்டிகளை (Websites links) வைக்கலாம். குறுஞ்செய்திகளை QR Code ஆக மாற்றலாம். மின்னஞ்சல்,வலைத்தள முகவரிகள், போன்ற Data க்களை QR Code படமாக மாற்ற முடியும்.

 

இந்த QR Code Image -ஐ உருவாக்குவதற்கு  நிறைய இணையதளங்களும் மென்பொருள்களும் உள்ளன. அம்மென்பொருளைப் பயன்படுத்தியும் QR Code Image ஐ உருவாக்கலாம்.

QR Code ன் மூன்று மூலைகளில் சிறிய கட்டங்கள் இருக்கும். சரியான திசையிலிருந்து படிப்பதற்கு இந்த கட்டங்கள் தான் உதவுகின்றன. இதுபோன்று பல நுணுக்கமான செயல்பாடுகள் QR Code இல் இருக்கும்.

 

Related posts