அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் தவெக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார்.
அவருடன் அவரது ஆதரவாளர்களும் தவெகவில் இணைந்தனர்.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
அதிமுக எப்போதும் தனக்கென்று வாக்கு வங்கி உள்ள ஒரு கட்சி. அதிமுகவில் இருந்தபோது பாஜகவை நம்பி இருந்ததாக கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பாஜகவை செங்கோட்டையன் நம்பி இருந்ததாக கூறுவது ஏற்புடையதல்ல. செங்கோட்டையனை பாஜக இயக்குவதாக கூறுவது தவறு. அப்படி இயக்கி இருந்தால் அவர் ஏன் தவெகவுக்கு சென்றார். பாஜக மிகப்பெரிய கட்சி, ஒரு கவுன்சிலர் கூட இல்லாத தவெகவுடன் எங்களை ஒப்பிடக்கூடாது. செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததால் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

