கேரளாவில் ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் தனது முகநூல் பக்கத்தில் மாணவர்களுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விடுமுறை அறிவிப்பு
கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் V. R. கிருஷ்ண தேஜா IAS அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கலெக்டர் மாமா
அந்த அறிவிப்பில், அன்புள்ள மாணவர்களே, உங்களுக்கு நாளையும் விடுமுறை அறிவுத்துள்ளேன் என்பதை பதிவு செய்து கொள்கிறேன். மழைக்காலம் என்பதால் பெற்றோர்கள் வேலைக்குச் செல்லும் போது அவர்களது வாகனங்களில் குடை, ரெயின்கோட் ஆகியவை உள்ளதா என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். அவர்களை வழி அனுப்பும் போது கட்டி அணைத்து முத்தம் கொடுக்க வேண்டும். நாங்கள் உங்களுக்காக காத்திருப்போம் கவனமாக வாகனம் ஓட்டி செல்லுங்கள் என்று அன்புடன் வழி அனுப்புங்கள். நான் உங்கள் பிரியமான கலெக்டர் மாமா என்று குறிப்பிட்டுள்ளார்.

