செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா நாளை நடைபெறுவதால் சென்னையின் முக்கிய இடங்களில் நாளை நாளை போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
பிரதமர் வருகை
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 29ம் தேதி தொடங்கி 14 நாட்கள் நடைபெறுகிறது. இதனையொட்டி இதன் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். பிரதமரின் வருகையினால் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
போக்குவரத்து
அதனால் இராஜா முத்தைய்யாச் சாலை, ஈவெரா பெரியார் சாலை, மத்தியச் சதுக்கம், அண்ணாமலை ஸ்பென்சர் சந்திப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

