இலங்கையில் இருந்து கஞ்சா கடத்தி செல்ல வேதாரண்யம் வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா வியாபாரிகள்
வேதாரண்யம் அருகே உள்ள சிறுதலைகாடு பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக 2 பேர் சுற்றுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் சிறுதலைக்காடு பகுதியில் கடலோர காவல் படையினர் தேடுதல் வேட்டை ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
மேலும், விசாரணையில் இலங்கை யாழ்ப்பாணம் பலாலி பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் (28), ஜெசிகரன் (21) என்பது தெரிய வந்தது. அவர்கள் இலங்கை பலாலியை சேர்ந்த அமலதாஸ் என்பவருக்கு சொந்தமான படகில் 31ம் தேதி மதியம் பலாலி மீனவ கிராமத்தில் இருந்து வந்ததாகவும் இலங்கைக்கு கஞ்சா கடத்தி செல்வதற்காக வந்ததாகவும் தெரிவித்தனர். 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். யாரிடமிருந்து கஞ்சா கடத்துவது குறித்து அவர்கள் யார் ? என கடலோர காவல் படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

