சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சுட்டு தற்கொலை
சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு மைதானத்தில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த ஆயுதப்படை காவலர் செந்தில்குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த காவலரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

