எச்.வினோத் இயக்கும் புதிய படத்தில் கமல் ஹாசன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எச். வினோத் படம்
வலிமை படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் எச்.வினோத், நடிகர் அஜித் இணைந்து பணியாற்றும் படம் ஏகே 61. இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், இயக்குனர் எச். வினோத் இயக்கம் அடுத்த படத்தில் கமல்ஹாசன் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏகே 61 படத்தின் பணிகள் முடிந்த பிறகு கமல் நடிக்கும் புதிய படத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

