திமிரி அருகே ஏரியில் மீன் பிடித்த வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
கொலை வழக்கு
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த ராமபாளையம் ஊரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் விலாரி ஏரியில் மீன் பிடிப்பதற்காக குத்தகை எடுத்துள்ளார். இவருடன் அதே பகுதியை சேர்ந்த தினகரன் மற்றும் அவரது மகன் அசோக் குமார் ஆகியோர் மீன் பிடித்து வந்துள்ளனர் . இந்தநிலையில், அந்த ஊரைச் சேர்ந்த கலையரசன் என்பவர் இரவு நேரங்களில் உரிமையின்றி ஏரியில் மீன் பிடித்துள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் கலையரசன் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து இந்த கொலையில் தொடர்புடைய தினகரன் மற்றும் அவருடைய மகன் அசோக் குமார் ஆகிய இருவரையும் திமிரி காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

